Saturday 4th of May 2024 12:10:23 AM GMT

LANGUAGE - TAMIL
பா.இரஞ்சித் படத்தில் கதாநாயகனான ஆர்யா!

பா.இரஞ்சித் படத்தில் கதாநாயகனான ஆர்யா!


இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஆர்யா தனது ருவிட்டர் பக்கத்தில் திடகாத்திரமான தனது கட்டுடலை வெளிக்காட்டும் வகையில் உடற்பயிற்சிக் கூடமொன்றில் கடுமையான பயிற்சிசெய்யும் காட்சியை காணொளியாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

பா.இரஞ்சித் படத்தில் குத்துச் சண்டை வீரர்களுடன் மோத தயாராக உள்ளேன். என் திரை வாழ்க்கையில் இது மிகவும் சவாலான படம் என்று ருவிட் செய்துள்ள ஆர்யா திடகாத்திரமான தனது கட்டுடல் குறித்த காணொளியையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தகவல் மூலம் பா.இரஞ்சித் இயக்கவிருக்கும் குத்துச் சண்டை விளையாட்டை அடிப்படையாக கொண்ட திரைப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளமை தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆர்யா ரசிகர்கள் பெரும் ஆவலுடன் குறித்த படம் தொடர்பான அடுத்தகட்ட தகவலுக்காக காத்திருக்கின்றனர்.


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE